Home ஆன்மிகம் திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணியில், மாலை 6 மணி அளவில் உற்சவர் முருகப் பெருமான், வள்ளி – தெய்வயானை தாயாருடன் சிறப்பு தங்க கவசங்களுடன் எழுந்தருளி, கோயில் மாட உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதனை தொடர்ந்து, மலைக்கோயில் மாடத்தில் உள்ள சொக்கப்பனையில் திருக்கோயில் தலைமை குருக்கள் அகண்ட தீபம் ஏற்றினார். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய் கொண்டு, மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி, மலைக்கோயிலுக்கு காவடி எடுத்து வந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


இதே போல், சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் மலை மீது அமைந்துள்ள 12 அடி உயரமுள்ள தூணின் மீது அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோசங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் திண்டுக்கல் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம்...

சிவகங்கையில் நீர் நிலைகளில் மூழ்கி சகோதரிகள் உட்பட 4 சிறுவர்கள் பலி

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் நீர்நிலைகளில் குளித்தபோது, நீரில் மூழ்கி சகோதரிகள் உள்பட 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

“ஆபீஸ் திறந்தும் அபேஸ் பண்ணிட்டு போய்ட்டிங்களே..” -தனியார் பைனான்சில் துப்பாக்கி முனையில் 12 கோடி நகைகள் கொள்ளை.

முத்தூட் நிதி நிறுவனத்தின் புகுந்த கொள்ளையர்கள் 25 கோடி மதிப்பிலான நகைக்களை கொள்ளையடித்து சென்றதால் கைது செய்யப்பட்டார்கள் .

காங்கிரஸை வெளியேற்ற நினைக்கிறதா திமுக?

காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது....
Do NOT follow this link or you will be banned from the site!