உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரத்து 465 பேர் பலி!
Jul 22, 2020, 08:06 IST1595385410000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 50 லட்சத்து 93 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 91லட்சத்து 10ஆயிரத்து 623 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது. இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரத்து 465 பேர் பலியாகி உள்ளனர்.