கோவிட் 19 வைரசால் இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலி!
Jul 1, 2020, 07:47 IST1593569869000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை இதுவரை உலகம் முழுவதும்1 கோடியே 5லட்சத்து 77 ஆயிரத்து 756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 57லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது. இதுவரை 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலியாகி உள்ளனர்.