• March
    31
    Tuesday

Main Area

Main



உலகின் மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த டாப் 10 நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடம்...

மும்பையில் போக்குவரத்து நெரிசல்
மும்பையில் போக்குவரத்து நெரிசல்

சர்வதேச உலகளாவிய இருப்பிட தொழில்நுட்ப நிபுணர் அமைப்பு, 2019ம் ஆண்டில் உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மோசமாக இருந்த டாப் 10 நகரங்கள் பட்டியலலை வெளியிட்டுள்ளது. உலகின் 57 நாடுகளில் 416 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் நம் நாட்டின் சேர்ந்த 4 நகரங்கள் இடம் பிடித்துள்ளன. 

பெங்களூரு போக்குவரத்து

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது. முந்தைய இரண்டு ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மும்பை கடந்த ஆண்டு 4வது இடத்துக்கு வந்துள்ளது. நெரிசல் காரணமாக பெங்களூரு டிரைவர்கள் சாலையில் வழக்கான பயண நேரத்தை காட்டிலும் கூடுதலாக 71 சதவீதம் நேரத்தை செலவிடுகின்றனர். அதேசமயம் மும்பையில் டிரைவர்கள் கூடுதலாக 65 சதவீத நேரத்தை சாலைகளில் செலவிடுகின்றனர்.

டெல்லி போக்குவரத்து

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்     தரவரிசை
பெங்களூரு                                                                1
மனிலா                                                                       2
போகோடா                                                                3
மும்பை                                                                     4
புனே                                                                           5
மாஸ்கோ                                                                 6
லிமா,பெரு                                                               7
டெல்லி                                                                     8
இஸ்தான்புல்                                                          9
ஜகார்தா                                                                 10
 

2018 TopTamilNews. All rights reserved.