வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பிய அமேசானின் ஜெஃப் பெசோஸ்!

 

வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பிய அமேசானின் ஜெஃப் பெசோஸ்!

உலக பணக்காரர்களில் ஒருவரான அமேசான் முன்னாள் சிஇஓ ஜெஃப் பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றுவிட்டு திரும்பிய அமேசானின் ஜெஃப் பெசோஸ்!

கடந்தவாரம் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு திரும்பினர். இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேருடன் விண்வெளிக்கு புறப்பட்ட நியூ ஷெப்பார்ட் ராக்கெட்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு புறப்பட்டது. அங்கு வெற்றிகரமாக தரையிறங்கிய இந்த ராக்கெட்டில், ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது மூதாட்டி வாலிஃபங்க், 18 வயது மாணவர் ஆலிவர் உள்ளிட்டோர் பயணித்தனர்.

இவர்கள் சுமார் 7 நிமிடங்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பினர். மேற்கு டெக்ஸாஸில் உள்ள பாலைவனத்தில் அவர்களது ராக்கெட் தரையிறங்கியது. ஜெஃப் பெசோஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.