Home லைப்ஸ்டைல் உறவுகள் உலகில் முதன்முறையாக ‘சிங்கிள்’ கல்யாணம்!

உலகில் முதன்முறையாக ‘சிங்கிள்’ கல்யாணம்!

’கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்’ ‘கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’… என ஏராளமான பழமொழிகள் கல்யாணம் குறித்து இருக்கின்றன. ஆண், பெண் இருவரிடயே திருமணம் நடப்பது பொதுமையான வழக்கம். ஆண் – ஆண் திருமணங்கள், பெண் – பெண் திருமணங்களும் நடப்பதையும் தற்போது பார்க்கிறோம். ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது பிரேசில் நடந்த சிங்கிள் கல்யாணம்.

ஆமாம். உலகின் முதன்முறையாக ‘சிங்கிள்’ கல்யாணம் நடந்திருக்கிறது. பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் ஒரு பக்கம் என்றாலும், வித்தியாசமான திருமண சம்பவங்களும் நடந்துகொண்டிருந்தான் இருக்கின்றன. பிரேசிலைச் சேர்ந்த டியோகா ரபேலா என்ற இளைஞருக்கும், விட்டர் ப்யூனோ எனும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.

நமது ஊரில் நிச்சயிக்கப்பட்டதும் மொபைலில் பேசி உறவை வளர்ப்பதுபோல இவர்களும் காதலை வளர்க்க, ஒரு கட்டத்தில் கருத்து மோதல் வெடித்துள்ளது. திருமண நாள் நெருங்கிய நிலையில் இருவருக்கும் தீர்க்க முடியாதளவு கருத்து வேறுபாட்டு ஏற்பட்டதால், திருமணம் செய்துகொள்ள அப்பெண் மறுத்துவிட்டார்.

அப்படியென்றால், திருமணம் நின்றுவிட்டதா என்று கேட்கலாம்… அதான் இல்லை. டியோகா ரபேலா எனும் அந்த இளைஞர் திட்டமிட்டப்படியே உறவினர்கள், நண்பர்களை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த ஹோட்டலுக்கு அழைத்தார். அவர்களும் வந்தனர். அங்கேதான் பெரிய ஆச்சர்யமான அதிர்ச்சி நடந்தது. ஆம். அந்த இளைஞர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டார். வந்தவர்களுக்கு முதலில் புரியவில்லை. பின் பாராட்டி, வாழ்த்தினர்.

’திருமணம் நின்றதை என் வாழ்வில் சோகமாக மாற்றாமல் நண்பர்களோடு சந்தோஷப்படுத்தவே இப்படிச் செய்தேன். விரைவில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வேன்’ என்றிருக்கிறார் டியோகா ரபேலா.

இந்தச் செய்தியை வைத்து தமிழ் சோஷியல் மீடியாவில் இன்னும் கல்யாணம் ஆகாத 90’ஸ் கிட்ஸ்களைக் கிண்டல் செய்து வருகிறார்கள். என்ன நியூஸ் வந்தாலும் நம்மையே டார்கெட் செய்யறாங்களே என 90’ஸ் கிட்ஸ் புலம்புகிறார்கள்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஜெபி நட்டா வீட்டில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தடியடிக்கும், கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் நடந்து வரும் இந்த போராட்டம்...

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த...

திருத்தணி முருகன் கோயிலில் பிரம்மாண்ட தீபம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில், கார்த்திகை தீபத்தை ஒட்டி, கோயிலின் எதிரேயுள்ள பச்சரிசி மலையில் பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது. முருக பெருமானின் ஐந்தாம்...

ஆட்டத்தில் தோல்வி; ஆனால் காதலில் வெற்றி! ஆஸ்திரேலிய பெண்ணின் இதயம் கவர்ந்த இந்தியர்!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. மைதானத்தில் இரு அணிகளும் தீவிரமாக ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால் பார்வையாளர்கள் பகுதியில் வித்தியாசமான சம்பவம் நடந்தது. இந்திய கிரிக்கெட்...
Do NOT follow this link or you will be banned from the site!