உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிபர் அறிவிப்பு

 

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிபர் அறிவிப்பு

உலகின் மாபெரும் பேரிடராக கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருவது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இதன் பாதிப்புகள் நிறைந்திருக்கின்றன. கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என நியூசிலாந்து நாடு அறிவிக்கிறது மறுபுறம் ஒரு லட்சம் பேரை கொரோனாவால் இழந்திருக்கிறோம் என பிரேசில் கூறுகிறது.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிபர் அறிவிப்பு

இந்தத் துயரம் முடிவடைய ஒரே வழி கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதுதான். பல நாடுகளும் இதற்கான முனைப்போடு செயலில் இறங்கியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் (Gamaleya Reserch Institue) தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி வெற்றிகரமாக அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசியை நாளை பதிவு செய்யவிருக்கிறது ரஷ்யா.

கொரோனா தடுப்பூசிக்கான டெஸ்டுகள் முடிவடைந்ததாக ரஷ்யாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்பே அறிவித்தார். ஆகஸ்ட்டில் பதிவு செய்து அக்டோபரில் நாடு முழுவதும் முகாம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருதார்.

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – ரஷ்யா அதிபர் அறிவிப்பு

ஆனால், ரஷ்யா இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவதாக மற்ற நாட்டினைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ரஷ்யா நாட்டு அதிபர் விளடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாகவே கொரோனா தடுப்பூசிப் பற்றி அறிவித்துவிட்டார்.

தங்கள் நாட்டு சுகாதரத்துறை கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டதாகக் கூறிய புடின், தனது மகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது என்பது உறுதியாகிறது.