உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்!

உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி மொடேரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இங்கு நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். சர்தார் வல்லபாய் படேல் என்ற பெயர் கொண்ட இம்மைதானத்துக்குத் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்!

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானமே உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயர் பெற்றிருந்தது. தற்போது அந்த மைதானத்தை அசரவைக்கும் விதமாக இந்தியாவிலேயே மிகப் பிரமாண்டமான மொடேரா மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் பிரபல நகரமான அகமதாபாத்தில் ஏற்கெனவே இருந்த சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தை மேம்படுத்தி இந்த மொடேரா மைதானம் உருவாக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்!

சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகள் அமையப் பெற்றிருக்கும் இம்மைதானத்தில் 76 எலைட் கேலரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேலரியிலும் தலா 25 பேர் அமர்ந்து போட்டியைக் கண்டுகளிக்கலாம். அதேபோல அனைவரையும் எளிதாக வெளியேற்றவும் அனுமதிக்கவும் நான்கு நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டல்!

ஒருவேளை போட்டியின்போது மழை பெய்தால் மழை நீர் அதிவிரைவாக வெளியேறும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிகமான மழை பெய்தாலும் விரைவாக மழை நீரை வெளியேற்றி 30 நிமிடங்களுக்குப் பிறகு போட்டியைத் தொடர்ந்து நடத்தலாம். ரத்துசெய்ய வேண்டிய அவசியம் இருக்காது.