வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து ரோட்டில் நடனமாடிய இளம்பெண்!

 

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து ரோட்டில் நடனமாடிய இளம்பெண்!

வேலை கிடைத்த சந்தோஷத்தில் இளம்பெண் ஒருவர் ரோட்டில் நடனம் ஆடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட பிரபலமான சமூக வலைத்தளங்களில் தினமும் பல வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு இளம்பெண்ணின் வீடியோ பல லட்சம் லைக்ஸை பெற்றிருக்கிறது. அந்த வீடியோவில், வேலை கிடைத்த மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று அறியாத அந்த இளம்பெண் ரோட்டிலேயே நடனம் ஆடுகிறார்.

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து ரோட்டில் நடனமாடிய இளம்பெண்!

இதனை அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்த முதலாளி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தான் வேலை கொடுத்ததற்கு இந்த பெண்ணின் ரியாக்ஷன் இது தன் என குறிப்பிட்டுள்ளார். இதுவரை அந்த வீடியோவை 5லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர். தான் ரோட்டில் யாரும் இல்லை என நினைத்து தான் மகிழ்ச்சியில் நடனமாடினேன், நான் நினைத்தது தவறு என வைரலான அந்த இளம்பெண் தெரிவித்திருக்கிறார்.