முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா

 

முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விதிக்கப்பட்ட பயணத்தடை முடிவுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று அமெரிக்கா. கொரோனா பரவலை தடுக்க அப்போதைய அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனா மற்றும் இந்த கொடிய வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையவும், அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதே சமயம் இந்த தடை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு பொருந்தாது என்றும் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு நவம்பர் முதல் கொரோனா பயணத்தடை நீக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிற நாட்டினர் அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் வரலாம். அதேபோன் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கும் செல்லலாம். கொரோனா பரவலை தடுக்க 18 மாதங்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் விதித்த பயணக் கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் தளர்த்தப்படவுள்ளது. குறிப்பிடதக்கது.