அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு!

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. வழக்கமாக அதிபர் பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும். ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் விழா நடைபெற்றது.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பதவியேற்ற பின்னர் முதல்முறையாக உறையாற்றிய டிரம்ப், "பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம். இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என கூறினார்.