“திருடினால் கை, கால்கள் வெட்டப்படும்” – மீண்டும் அமலாகும் தலிபான்களின் கொடூர தண்டனைகள்!

“திருடினால் கை, கால்கள் வெட்டப்படும்” – மீண்டும் அமலாகும் தலிபான்களின் கொடூர தண்டனைகள்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்கள் சொல்லும் ‘சீர்திருத்த’ ஆட்சி எப்படி இருக்கும் என உலகமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் தலிபான்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான முல்லா நூருதீன் துராபியின் பேட்டி அவர்களின் கோரமுகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. அவர்கள் இன்னமும் மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

“திருடினால் கை, கால்கள் வெட்டப்படும்” – மீண்டும் அமலாகும் தலிபான்களின் கொடூர தண்டனைகள்!

இவர் கடந்த தலிபான் ஆட்சியில் இஸ்லாமிய சட்டத்தின்படி தண்டனைகளை வரையறுத்தவர்களில் முதன்மையானவர் இந்த துராபி. அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “எல்லோரும் எங்களுடைய சட்டத்திட்டங்களையும் தண்டனைகளையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் வேறு யாருடைய சட்டங்களையும் தண்டனைகளையும் கண்டுகொள்வதே இல்லை. எங்கள் சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாங்கள் இஸ்லாமியத்தைப் பின்பற்றுகிறோம்.

“திருடினால் கை, கால்கள் வெட்டப்படும்” – மீண்டும் அமலாகும் தலிபான்களின் கொடூர தண்டனைகள்!
துராபி

குரானிலிருந்து எங்கள் சட்டங்களை உருவாக்கிக் கொள்கிறோம். பாதுகாப்பு தேவைகளுக்காக கைகளை வெட்டுவது முக்கியமானது. நெடுஞ்சாலைகளில் திருட்டுச் செயலில் ஈடுபட்டால் கால்கள் வெட்டப்படும். இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் பெரும்பாலான குற்றங்களைத் தடுக்க முடியும். அதேபோல எங்கள் அமைச்சரவையைக் கூட்டி சட்டத்திட்டங்கள், தண்டனைகள் தொடர்பாக புதிய கொள்கைகளை உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளவிருக்கும்” என்றார். தற்போது இடைக்கால அரசே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

“திருடினால் கை, கால்கள் வெட்டப்படும்” – மீண்டும் அமலாகும் தலிபான்களின் கொடூர தண்டனைகள்!

முழு அரசும் அமைந்த பின் இதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும் என சொல்லப்படுகிறது. முந்தைய தலிபான் ஆட்சியில் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனங்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கே அதிகப்படியான தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. முழுவதுமாக உடலை மூட வேண்டும், ஆண் துணையில்லாமல் வெளியே செல்லக் கூடாது, கல்வி கற்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதை மீறும் பெண்களுக்கு கை, கால்கள் வெட்டப்படுவது முதல் தூக்கு தண்டனை வரை தண்டனைகள் வழங்கப்பட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.