உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!
Dec 31, 2024, 17:01 IST1735644711237
நியூசிலாந்து நாட்டில் உலகில் முதல் நாடாக ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் வாழும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புத்தாண்டு பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. புத்தாண்டை வரவேற்க நாடு முழுவதும் மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றன. புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்துக்களை பறிமாறியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வர்.
இந்த நிலையில், உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு அந்நாட்டில் உள்ள ஸ்கை டவரில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பறிமாறி மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.