ஜோ பைடன் அமைசரவையில் பாதுகாப்பு துறை இவருக்கா?

 

ஜோ பைடன் அமைசரவையில் பாதுகாப்பு துறை இவருக்கா?

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சி சார்பிலும், ஜனநாயக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

அமெரிக்க அதிபராக எலெக்ட்ரால் காலேஜ் வாக்குகள் 270 எடுக்க வேண்டும். ஜோ பைடன் 306 வாக்குகள் பெற்றுவிட்டார். இதனால், ஜோ பைடன் அதிபராவது உறுதியாகியுள்ளது.

ஜோ பைடன் அமைசரவையில் பாதுகாப்பு துறை இவருக்கா?

இந்நிலையில், ட்ரம்ப் வசம் இருக்கும் அதிகாரங்களை பைடனுக்கு மாற்றம் செய்யும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதில், 20 பேர் அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். இக்குழுவுக்கு ட்ரம்ப் தரப்பில் தொடக்கத்தில் ஒத்துழைப்பு தர வில்லை. அதன்பின், மனம் மாறி அதிகாரங்கள் மாற்ற சம்மதித்துள்ளார் ட்ரம்ப்.

ஜோ பைடன் ஜனவரி மாத இறுதியில் அதிபராகப் பொறுப்பேற்கிறார். அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பிடிக்க விருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருகி வருகிறது. அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இதில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

ஜோ பைடன் அமைசரவையில் பாதுகாப்பு துறை இவருக்கா?
Lloyd Austin

ஜோ பைடனில் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறைக்கு லாய்ட் ஆஸ்டின் தேர்வு செய்யப்படலாம் என்ற செய்தி அடிபடுகிறது. அமெரிக்க ராணுவத்திற்கு தலைமையேற்று வழிநடத்தியவர் லாய்ட் ஆஸ்டின்.

67 வயதான லாய்ட் ஆஸ்டின் 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் அமெரிக்க ராணுவத்தில் கமெண்டராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.