7 மாடி குடியிருப்பில் தீ விபத்து- கர்ப்பிணி உட்பட20 பேர் உயிரிழப்பு
Dec 9, 2025, 16:24 IST1765277648668
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
![]()
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 15 பேர் பெண்கள், 5 ஆண்களாவர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்றும் சொல்லப்படுகிறது. முதல் மாடியில் பற்றிய தீ, அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவியதால் அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காற்றில் அடர்ந்த புகை கிளம்பியதால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.


