“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!

“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!

அமெரிக்கா நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 21ஆம் தேதி இந்தக் கூட்டம் தொடங்கி நான்கு நாட்களாக நடக்கிறது. கூட்டத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடன் ஏற்படும் வில்லங்கங்கள், சர்வதேச சர்ச்சைகள் குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தன்னுடைய கருத்தை எடுத்துரைத்துள்ளார். அவரால் நேரால் கூட்டத்தில் கொள்ள முடியவில்லை. மாறாக அவர் பேசிய ஆடியோ பொதுச்சபையில் ஒலிப்பரப்பட்டது.

“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!

அந்த ஆடியோவில் பேசியுள்ள அவர் அமெரிக்காவையும் பாஜக அரசையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதில் அவர், “ஆப்கானிஸ்தானின் நிலைக்கு நாங்கள் தான் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. இதனை பகீரங்கமாக மறுக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இவையனைத்திற்கும் அமெரிக்கா தான் முழுமுதற் காரணம். ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தை எதிர்க்கவே முகாஜிதீன்களுக்கு (இன்றைய தலிபான்கள்) பயிற்சி கொடுத்து அவர்களை ஹீரோவாக்கியது. பின்னர் அதன் பிரதிபலனை அமெரிக்கா அறுவடை செய்தது.

“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!
பைடன் – இம்ரான் கான்

இதற்குப் பின் தலிபான்களையும் அவர்கள் எதிர்த்து போரிட்டார்கள். எங்களையும் சேர்த்துக்கொண்டது. ஆனால் பழி முழுவதும் எங்கள் மீது போட்டார்கள். கிட்டத்தட்ட 1 லட்சம் பாகிஸ்தானியர்களை இழந்தது தான் மிச்சம். அமெரிக்காவின் நன்றியற்ற உணர்வுக்கு நாங்கள் பலியாகிவிட்டோம். தலிபான்கள் ஆட்சியில் நிச்சயம் மனித உரிமைகள் காக்கப்படும் என நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் முழுமையான அரசு ஏற்பட்டு, பயங்கரவாதிகள் ஆப்கான் மண்ணை பயன்படுத்த முடியாத வகையில் அவர்கள் தடுப்பார்கள்.

“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!
இம்ரான் கான்

இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் அரசு முழுக்க முழுக்க இந்துத்துவ சிந்தனை கொண்ட அரசாக உள்ளது. அவர்கள் இஸ்லாமியர்களை எந்த வழிகளிலெல்லாம் ஒடுக்க வேண்டுமோ அவ்வழிகளில் ஒடுக்கிறார்கள். அங்குள்ள 20 கோடி இஸ்லாமிய மக்கள் சமூகத்துக்கு எதிராக வன்முறையையும், அச்சத்தையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். பசு மாட்டுக்காக கொலைகள், கும்பல் வன்முறை, குடியுரிமை திருத்தச் சட்டம் என அனைத்தும் இஸ்லாமியர்களை ஒடுக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.

“நன்றிகெட்ட அமெரிக்கா; பாஜகவிற்கு இஸ்லாமியர்களே குறி” – ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இம்ரான் கான்!
சையது அலி கிலானி

காஷ்மீர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எட்ட இந்திய அரசு அழைக்கிறது. ஆனால் அதற்கு நேர்மாறாக காஷ்மீரில் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுகிறார்கள். காஷ்மீரின் சிறந்த தலைவர் சையது அலி கிலானி மரணித்த பின் அவரின் சடலத்தை வலுக்கட்டாயமாக இந்தியப் படைகள் பிடுங்கிச் சென்று, அடக்கம் செய்தனர். இஸ்லாமிய முறைப்படி முழுமையாக அடக்கம் செய்யப்படவில்லை” என்றார்.