அமெரிக்காவில் பெய்த பண மழை! கைநிறைய அள்ளிச்சென்ற மக்கள்

 
money

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காப்பீட்டு முகமைக்கு டிரக்கில் பணத்தை கொண்டு செல்லும்போது டிரக்கின் கதவு திறந்ததால் பணக்கட்டுகள் சாலையில் சிதறின. சாலையில் கொட்டிய பணத்தை அப்பகுதி மக்கள் அள்ளிச்சென்றனர்.

Truck spills bags of money on road

அமெரிக்காவில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ.க்கு எடுத்துச்சென்ற வண்டி ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால் பணம் அனைத்தும் காற்றில் பறந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு வாகனத்திலிருந்து கீழே விழுந்த பணத்தை அள்ளிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் கிடந்த பணத்தை ஓட்டிகள் அள்ளிச்செல்லும் வீடியோவை வைத்து பணத்தை திரும்பப்பெறும் முயற்சியில் அந்நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது. 

பணத்தை எடுத்துச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவும் என வங்கி நிர்வாகம் அறிவித்ததையடுத்து, பலரும் முன்வந்து பணத்தை ஒப்படைத்து நேர்மையை காட்டியுள்ளனர். பணம் கொட்டும்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.  அதை வைத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். டிரக்கை ஓட்டிச் சென்ற டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.