உலகளவில் 29.24 கோடியாக அதிகரித்த கோரோனா பாதிப்பு.. அமெரிக்காவில் நேற்று 2.97 லட்சம் பேருக்கு தொற்று உறுதி..

 
கோரோனா வைரஸ்

அமெரிக்காவில் நேற்று (ஜன 2) ஒரே நாளில் 2.97 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் ஒரே நாளில் 560 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை உலுக்கி எடுத்துவரும் கொரோனா, இதுவரை 221 நாடுகளுக்குப் பரவி  தனது கோர தாண்டவத்தை அரங்கேற்றியிருக்கிறது.  வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உலகம்  முழுவதும் தடுப்பூசி செலுத்தும்  பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம் 2 டோஸ்களைத் தாண்டி பூஸ்டர் டோஸ், மூன்றாவது டோஸ் என தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

ஒமைக்ரான் கொரோனா

இதுவரை உலகம் முழுவதும் 29 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 கோடியே 50 லட்சத்து 98 ஆயிரத்து 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  தற்போது 3 கோடியேஎ 19 லட்சத்து 20 ஆயிரத்து 718 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அதே நேரம் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை564 லட்சத்து 65 ஆயிரத்து 138  ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக  அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது,. அங்கு ஜனவரி 2ஆம் தேதி மட்டும்  2 லட்சத்து 97 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 560 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கின்றனர்.  இங்கிலாந்தைப் பொறுத்தவரை தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அங்கு உயிரிழப்பு விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது.

சீனா கொரோனா

  அங்கு கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 758 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 42 பேர் மட்டுமே உயிரிழந்தனர்.  இதேபோல் ஸ்பெயினில்  93 ஆயிரத்து 190 பேரும், பிரான்ஸில் 67,461 பேரும், இத்தாலியில் 68 ஆயிரத்து 052 பேர் நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.