பாதி தும்பிக்கையை இழந்து பரிதவிக்கும் குட்டி யானை - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்

 
eli

வேட்டைக்காரர்களால் பாதி தும்பிக்கையினை இழந்து பரிதவிக்கிறது குட்டியானை.  இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .  இதை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகின்றனர்.   நெஞ்சை உறைய வைக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அந்த வேட்டைக்காரர்களுக்கு கடும் தண்டனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

யானை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் தும்பிக்கை தான்.  யானைகளுக்கு தும்பிக்கைதான் உணவு அருந்துவதற்கும்,  நீர் அருந்துவதற்கும் சுவாசிப்பதற்கும் யானைகளுக்கு பயன்படுகிறது.   இன்னும் சொல்லப்போனால் எந்த வேலையைச் செய்யவும் எந்த பொருளை எடுக்க வேண்டும் என்றாலும் எதைச் செய்யவேண்டும் என்றாலும் எல்லாவற்றுக்கும் யானைகளுக்கு பேருதவியாக இருப்பது தும்பிக்கை தான்.   இந்த தும்பிக்கை இழந்தால் யானை உயிர் வாழ்வது மிகவும் சிரமம்.  அது  மிகக்கொடுமையான வாழ்க்கையாகும்.  

e

அப்படித்தான் ஒரு குட்டி யானை தும்பிக்கையை இழந்து கொடுமையை அனுபவித்து வருகிறது.   இந்த புகைப்படத்தை பார்த்த வன ஆர்வலர்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 இந்தோனேசியாவில் ஆச்சே பகுதியில் யானைகளை வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்கள்  வலையை  வைத்துவிடுகிறார்கள்.  அந்தவலையில் எதிர்பாராதவிதமாக சிக்கிய குட்டியானை தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது தன்னுடைய பாதி தும்பிக்கையை இழந்துவிட்டதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யானைகளை வேட்டையாடி அதன் மூலம் வருமானத்தை ஈட்டும் பழக்கம்  இன்னும் அதிகரித்து விட்டதாக  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

 விஷம் வைத்து , பொறிவைத்து உயிரினங்களை கொல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கிழக்கு ஆச்சே மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 25 சுமத்திரா யானைகள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.  பணம் சம்பாதிப்பதற்காக இப்படி உயிர்களை வேட்டையாடுவது வெளிப்படையாக நிகழுகிறது.  ஆனால் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் .  

 கிழக்கு ஆச்சே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு பனை தோட்டத்தில் ஒரு யானை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்டது.   உயிரிழந்த விலங்கின் தந்தத்தை விற்றதும் கண்டறியப்பட்டது.  இதில் ஒருவரை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

 அழிந்துவரும் யானைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.