இலங்கையின் அதிபராகிறார் அனுர குமார திசநாயக்க! யார் இவர்?

 
யார் இந்த அனுர குமார திசநாயக்க?

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க 52% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

On demeaning Anura Kumara Dissanayake – The Island

யார் இந்த அனுர குமார திசநாயக்க?


அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர் அனுர குமார திசநாயக்க. இலங்கையில் மாற்றம் தேவை, ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தவர் ஏகேடி எனப்படும் அனுர குமார திசநாயக்க. 1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார். கடந்த 2022-ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது, மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்

16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களால் மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில், சாதாரண மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என முழக்கத்தை அழுத்தமாக சொன்னார். இலங்கை பொதுஜென பெருமுனாவின் மீதான அதிருப்தியை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றபோது ஏகேடிக்கு பெரியளவிலான ஆதரவு தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். இலங்கையின் தென்பகுதியில் மட்டுமில்லாமல், தமிழர்கள் வசிக்கும் பகுதியிலும் அனுர குமாரவுக்கு அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். மாற்றத்தை முன்னிறுத்தி தேர்தலை கண்ட ஏகேடிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இளைஞர்கள், சிங்களர்கள், தமிழர்கள் என அனைத்து தரப்பினருக்கும் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.