அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இலங்கையில் அதிகார மாற்றம் - ஐ.நா. கோரிக்கை

 
UN

இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அதிகார மாற்றம் அமைதியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் என ஐநா தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  ராஜபக்சே குடும்பமே காரணம் என , அரசுக்கு எதிராக மக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   மக்கள் போராட்டம் வெடித்ததும், மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்..  ஆனால் அதன்பிறகும் அங்கு  பிரச்சனைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை.   3 நாட்களுக்கு முன்பு அதிபர்  மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.   இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதனிடையே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.  இதனை தொடர்ந்து இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

srilanka

அந்நாட்டில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூப்பட்டுள்ளதாவது: அரசியல் சாசனத்திற்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும். இதனை அனைத்து அரசியல் உறுப்பினர்களும் உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை மற்றும் பொதுமக்களின் தீர்க்கப்படாத குறைகள் ஆகியவற்றுக்கான மூலக்காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பது மிக அவசியம்.  இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு, அனைத்து அரசியல் உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையே சிறந்த வழி. இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.