டைட்டானிக் கேட் வின்ஸ்லெட் மருத்துவமனையில் அனுமதி

 
v

டைட்டானிக் படத்தின்  நாயகி கேட் வின்ஸ்லெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் வெளியானது டைட்டானிக்.  1912 ஆம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது.  உலகம் முழுவதும் இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.  11 ஆஸ்கார் விருதுகளை குவித்தது. இப்படத்தில் நாயகன் நாயகியாக லியானார்டோ டிகாப்ரியோ , கேட் வின்ஸ்லெட் நடித்தனர்.   இப்படத்தின் மூலம் அவர்கள் உலகப் புகழை அடைந்தனர்.

ட்

 கேட் வின்ஸ்லெட் அவதார் - தி வே ஆப் வாட்டர் படத்திலும் நடித்துள்ளார்.  இப்படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது.  இவர் எலன் குரான் இயக்கத்தில் லீ  என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.  படத்தின் படப்பிடிப்பு குரேசியா நாட்டில் நடந்து வருகிறது .  படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.   இதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .  

சிகிச்சைக்கு  பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பில் பங்கேற்பார் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.