அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி.. 19 பேர் படுகாயம்..

 
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு:  3 பேர் பலி..  19 பேர் படுகாயம்..

அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் நேற்று 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்,  வாஷிங்டன்னில் இன்று அதிகாலை 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வாஷிங்டன் நகரில் உள்ள யக்கிமா என்கிற இடத்தில் இன்று அதிகாலை பல்பொருள் அங்காடிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தினார்.  21 பேரை அந்த நபர் சுட்டதில் 3  பேர் நிகழ்வு இடத்திலேயே மரணமடைந்தனர்.  19 பேர் படுகாயங்கள் அடைந்துள்ளனர்.  நேற்று கலிஃபோர்னியாவில் மூன் -ஹாப் நகரில்  இரண்டு இடங்களில் மக்கள் கூட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்.  இதில் இரண்டு மாணவர்கள் உட்பட 9  பேர் கொல்லப்பட்டனர்.  இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறப்பு

இந்த துப்பாக்கி கலாச்சாரத்திற்கு உடனே முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள கலிஃபோர்னியா மாகாண ஆளுநர்,  துப்பாக்கி உரிம சட்டங்களுக்கு நீதிபதிகள் ஆதரவு தெரிவிப்பது வெட்கக்கேடு என்றும் சாடியுள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், “துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க நாங்கள் கொண்டு வந்த சட்டத்தை நீதிபதிகள் ஆதரிக்காதது வெட்கக்கேடானது. நீதிபதிகள் வெட்கப்பட வேண்டும்.  நீங்கள் இதற்கு அல்ல சிறப்பான ஒன்றுக்கு தகுதியானவர்கள்; நாங்களும் சிறப்பான ஒன்றுக்கு தகுதியானவர்கள்.  நம் எல்லோரையும் போல் நான் இங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.  எங்கு பார்த்தாலும் அபத்தம்; இந்த அபத்தம் அமெரிக்காவில் மட்டும் நிகழ்கிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு:  3 பேர் பலி..  19 பேர் படுகாயம்..

கடந்த 22 ஆம் தேதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது,  முதியவர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.  இதில் 11 பேர் உயிரிழந்துவிட்டனர். 8 நாட்களுக்கு முன்பு மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில் ஆறு மாத குழந்தை,  தாய் உட்பட ஆறு பேரை போதைப்பொருள் கடத்தல் கும்பல் சுட்டுக் கொன்றது. இப்படியாக 2023ம் ஆண்டு  அடுத்தடுத்த தாக்குதல்கள்,  துப்பாக்கி தோட்டா சத்தம்,  அப்பாவி மக்கள் உயிர்கள் பலி சம்பவங்களுடன்  தொடங்கி இருப்பது, அந்நாட்டு மக்களிடையே  பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.