வலுக்கை தலையை கேலி செய்வது பாலியல் குற்றம்! அதிரடி தீர்ப்பு

 
ஹ்

பெண்ணின் சம்மதம் இன்றி அவரை தன் இச்சைக்கு உட்படுத்துவதும், சீண்டுவதும் பாலியல் குற்றம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம் என்று பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

 இங்கிலாந்தில் மேற்கு யார்ஷயர் நகர்.   இப்பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நபர்,  கடந்த ஆண்டு திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 

ஹெஅ

 இது குறித்து அவர் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.    தான் வேலை பார்த்த நிறுவனத்தின் உயர் அதிகாரி தனது வழுக்கையை கேலி செய்தார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.   அதனால் நியாயமற்ற முறையில் என்னை பணி நீக்கம் செய்து விட்டார்கள் என்று மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,   பணியிடங்களில் பெண்களின் உடல் பாகங்களை கேலி செய்வது பாலியல் குற்றம் என்பதை போல் தான்,   ஆண்களின் வழுக்கையை கேலி செய்வதும் பாலியல் குற்றத்திற்குள் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர் .

மேலும்,   சம்பந்தப்பட்ட நபருக்கு அவரை பணிநீக்கம் செய்த நிறுவனத்தின் சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .

ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வதும் பாலியல் குற்றம் என்று இங்கிலாந்து தொழிலாளர் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.