ஜாவா தீவு நிலநடுக்கம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக உயர்வு - 300 பேர் கவலைக்கிடம்

 
i

ஜாவா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்திருக்கிறது. 

 இந்தோனேசியாவின்  ஜாவா தீவில் சிவாஞ்சூர் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் உண்டானது.   5.6 ரிட்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.   இந்த பயங்கர நில நடுக்கத்தினால் வீடுகள், பள்ளிக்கூடம் மருத்துவமனை உட்பட 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

in

 மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வந்தன.   மீட்பு பணியின் போது 162 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.   200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  இடிபாடுகளில் மேலும் சிக்கி இருந்தவர்களை மீட்க மீட்பு பணிகள் விடிய விடிய நடந்து வந்தது. 

 நேற்று காலையில் இடிபாடுகளில் இருந்து 90 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.  இதை அடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்தது.  மேலும் 200க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.   இதுவரைக்கும் படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்திருக்கிறது.  இதில் சுமார் 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

 தற்போது வரைக்கும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்திருக்கிறது.  பள்ளிகளில் வகுப்புகளின் போது  ஏற்பட்ட நில நடுக்கத்தினால்  பல குழந்தைகள் பலியாகி உள்ளனர். 

 சுமார் 1000 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் 151 பேர்  காணவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.