மெக்சிகோ நாட்டில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் - மக்கள் பீதி

 
earth

மெக்சிகோ நாட்டில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

மெக்சிகோ நாட்டின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் கடந்த திங்கள் கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடைந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

afghanistan Earthquake

இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அகுய்லில்லா பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கே 46 கி.மீ. தொலைவில் பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.