பள்ளி அருகே கிடந்த வெடிகுண்டு.. எடுத்து விளையாடிய 4 மாணவர்கள் உடல்சிதறி பலி..

 
ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு..

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு..

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி செய்து வருகின்றன.   ஆப்கனின் தெற்கு மாகாணமான ஹெல்மண்ட் அருகே நாட் அலி என்கிற  இடத்தில் இஸ்லாமிய மாணவர்களுக்கான பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு  நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியே மாணவர்கள் சிலர்  விளையாடி கொண்டிருந்துள்ளனர். அப்போது  அவர்களுக்கு வெடிக்காத குண்டு ஒன்று கிடைத்ததாக கூறப்படுகிறது.   அதனை வைத்து சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிகுண்டு  பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.  

 குண்டுவெடிப்பு…

இதில் விளையாடிக்கொண்டிருந்த  4 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உடல்சிதறி பரிதாபமாக  உயிரிழந்தனர்.   மேலும் 8 மானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.  இதனையடுத்து  தகவல் அறிந்து  நிகழ்விடத்திற்கு விரைந்து  வந்த தாலிபன் படையினர், காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,  பள்ளி அருகே வெடிகுண்டு வந்தது எப்படி? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அத்துடன்  அந்தப்பகுதியில் இதேபோல் வேறு ஏதேனும் குண்டுகள் கிடக்கின்றனவா என்றும்  சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இந்த வெடிவிபத்தும், 4 பள்ளி மாணவர்கள்  உயிரிழந்தத சம்பவமும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.