ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்

 
shooting

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் 6 வயது சிறுவன் ஆசிரியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நியூபோர்ட் நியூஸில் உள்ளது ரிச்செனக் தொடக்கப்பள்ளி. அங்கு படிக்கும் 6 வயது சொறுவன், 20 வயதான ஆசிரியை தான் கொண்டுவந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் படுகாயமடைந்த ஆசிரியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், சிறுவனை கைது செய்து, அவரிடம் துப்பாக்கி வந்தது எப்படி என விசாரணை நடத்திவருகின்றனர். இதில் உடன்படிக்கும் மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பள்ளியின் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்க்கர் கூறுகையில், “நான் அதிர்ச்சியில் இருக்கிறேன், நான் மனமுடைந்துவிட்டேன்” என்றார்.


அமெரிக்காவில் பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸின் உவால்டேயில் 18 வயது இளைஞன்,  19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்களைக் கொன்றான். கடந்த ஆண்டு அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பாக 44,000 இறப்புகள் பதிவாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.