தூசிப்புயல், ஆலங்கட்டி மழையால் தேள் கடித்து 500 பேர் மருத்துமனையில் அனுமதி

 
eg

தேள் கொட்டியதால் 500 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

எகிப்து நாட்டின் அஸ்வான் மாகாணத்தில்  ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.  இந்த ஆலங்கட்டி மழையினால் வீடுகள், விவசாய பண்ணைகள், வாகனங்கள் அனைத்தும் கடும் சேதம் அடைந்துள்ளன. இதில், தேள்கள் துளைகளில் இருந்து வெளியேறி தெருக்களில், வீடுகளில் , வீதிகளில் அடிகம் வலம் வர தொடங்கிவிட்டன.  இதனால் மனிதர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தேள்கள் கொட்டியதில் 500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதை அந்நாட்டின்  சுகாதார துறை அமைச்சர் கலித் கபார் தெரிவித்திருக்கிறார்.  இதில் மூன்று பேர் உயிர் இழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

egg

தூசிப் புயல்கள், கன மழை மற்றும் ஆலங்கட்டி மழை வெள்ளிக்கிழமை முதல் மேல் எகிப்தில் உள்ள பல பகுதிகளை பாதித்துள்ளது.  இதனால், அஸ்வானின் சில பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.   பல மண் செங்கல் வீடுகள் இடிந்து விழுந்தன.   டிவி ஒளிபரப்பு, இணையம் மற்றும் மின்சாரம் ஆகியவை  சில பகுதிகளில் துண்டிக்கப்பட்டன.   இதனால் ஆளுநர் பள்ளிகளை மூட முடிவு செய்தார்.

இதுகுறித்து எகிப்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை ஆய்வு மற்றும் முன்னறிவிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் மஹ்மூத் ஷஹீன், தெற்கு எகிப்தில் தீவிர வானிலை அலைக்கு காலநிலை மாற்றங்கள் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். வானிலை நிகழ்வுகள் தீவிரமானதாகவும் வன்முறையாகவும் இருக்கும், மேலும் வெள்ளிக்கிழமை அஸ்வானில் ஆலங்கட்டி மழை பெய்தது, இது ஆண்டு முழுவதும் வெப்பமாக இருக்கும் ஒரு பகுதிக்கு ஒரு அரிய நிகழ்வாகும் என்கிறார்.

 இதற்கிடையில்,  புயல்களால் இயற்கையான வாழ்விடங்களிலிருந்து வெளியேறிய தேள்கள் மற்றும் பாம்புகள், பெரும்பாலான கிராமங்களில் வசிப்பவர்களைக் கடித்தது.  மலைகளில் இருந்து தொடர்ந்து மழைநீர் தேங்கியுள்ளதால், இந்த சம்பவங்கள் தீவிரமடையும் என பலர் அஞ்சுகின்றனர்.

அஸ்வானில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார பிரிவுகளுக்கு 3,000 க்கும் மேற்பட்ட தேள் கடி மருந்து விநியோகிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் காலித் மெகாஹெட்  தெரிவித்துள்ளார்.

பலத்த மழை அல்லது புழுதிப் புயல்களுக்குப் பிறகு தேள் மற்றும் பாம்புகளால் ஏற்படும் காயங்கள் பொதுவானவை என்றும், அவற்றில் பெரும்பாலானவை மலைகளுக்கு அருகாமையில் உள்ளன, ஏனெனில் கடுமையான வானிலை காரணமாக தேள்கள் மற்றும் பாம்புகள்  அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கின்றன.
என்று அஸ்வான் குடியிருப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.  நைல் நதிக்கரையில் அமைந்துள்ள மூன்று அஸ்வான் பகுதிகளின் கிராமங்களுக்கு மலைகளில் இருந்து மழை சேகரிக்கப்பட்டு வடிகட்டுவதால் காயங்கள் ஏற்படும் அபாயத்தை தாங்கள் எதிர்பார்த்ததாகச் சொன்னார்கள்.

அஸ்வான்  தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை  பம்ப் வைத்து வெளியேற்றி, மின்கம்பங்கள் மற்றும் ஆண்டெனா வயர்களை பாதுகாத்து, மரங்கள் விழுந்து நொறுங்கிய கார்களை அகற்றி, மின் இணைப்புகளை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் நிலையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.