வங்காளதேச மருத்துவமனையில் தீ விபத்து – 5 கொரோனா நோயாளிகள் மரணம்

 

வங்காளதேச மருத்துவமனையில் தீ விபத்து – 5 கொரோனா நோயாளிகள் மரணம்

டாக்கா: வங்காளதேச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள யுனைடெட் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தனிமைப்படுத்துதல் வார்டில் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி கூறினார். இறந்தவர்களில் நான்கு ஆண்கள் மற்றும் 45 முதல் 75 வயதுடைய ஒரு பெண் அடங்குவர் என கூறினார்.

இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தற்போதைக்கு விபரம் தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். வங்காளதேசத்தில் 38,292 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை அந்நாட்டில் 544 இறப்புகள் கொரோனா காரணமாக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதை சமாளிக்க அங்குள்ள மருத்துவர்கள் போராடி வருகின்றன.