ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி

 
Afgan blast

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து உள்நாட்டு போரை தீவிரப்படுத்திய தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்றது முதலே தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்க படைகள் வெளியேறிய மறுநாளே அங்கு பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இவ்வாறு தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அங்குள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்று நண்பகல் 12.40 மணி அளவில் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே விசாவிற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில், அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் தூதரகத்தில் பணியாற்றிய இரண்டு ரஷ்ய அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.