மைக்கை கடித்த பாம்பு…அலறிய டிவி தொகுப்பாளினி – வைரல் வீடியோ

 

மைக்கை கடித்த பாம்பு…அலறிய டிவி தொகுப்பாளினி – வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் டிவி தொகுப்பாளினியின் மைக்கை கடித்த பாம்பின் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் டிவி தொகுப்பாளினியின் மைக்கை கடித்த பாம்பின் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நைன் நியூஸ் என்ற டிவி சேனல் பாம்பு பாதுகாப்பு பற்றி அண்மையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நிருபர்களும், புகைப்பட-வீடியோகிராபரும் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்வார்கள். சமயங்களில் எதிர்பாராத சுவாரஸ்யமான விஷயங்களும் அப்போது நடக்கும். அதேபோல தான் இந்த பாம்பு பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சியும் அமைந்து விட்டது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் தோள்களில் விஷம் இல்லாத சிறிய மலைப்பாம்பை வைத்து அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகுப்பாளினியின் கைகளில் இருந்த மைக்கையே குறு,குறுவென பார்த்துக் கொண்டிருந்த மலைப்பாம்பு சட்டென்று அதைக் கடித்தது. இதை சற்றும் எதிர்பாராத டிவி தொகுப்பாளினி ஜெர்க் ஆனார்.

இருந்தாலும் அதை சமாளித்துக் கொண்டே தொகுப்பாளினி அந்த நிகழ்ச்சியை எப்படியோ முடித்துக் கொடுத்தார். ஆனாலும் இடையிடையில் பாம்பு மைக்கை விடுவதாயில்லை. அது மைக்கை கடிக்க பாயும்போது தொகுப்பாளினி நடுங்கிக் கொண்டே இருந்தார். அதனால் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நொடியே “அந்த பாம்பை அகற்றுங்கள்” என கூறிவிட்டு ஓடிவிட்டதாக தொகுப்பாளினி சிரித்துக் கொண்டே சொன்னார்.