தவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம்

 

தவறாக அச்சடிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பணம்

​​​​​​​ஆஸ்திரேலியாவின் 50 டாலர் நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது  7 மாதத்திற்கு பின்னர் தற்போது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் 50 டாலர் நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது  7 மாதத்திற்கு பின்னர் தற்போது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் 50 டாலர் நோட்டில் ‘ரெஸ்பான்ஸிபிலிட்டி’ (responsibility) என்ற வார்த்தை தவறுதலாக ‘ரெஸ்பான்ஸிபில்டி’ (responsibilty) என்ற அச்சிடப்பட்டுள்ளது. இந்த நோட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட டாலர் ஆகும். இதுபோன்று 184 மில்லியன் 50 டாலர் நோட்டுகள் கடந்த ஆண்டில் அச்சிடப்பட்டு ஆஸ்திரேலிய ரிவர்வ் வங்கியின் மூலம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. தற்போதுவரை 4 கோடியே 60 லட்சம் மக்கள் இந்த பணத்தை பயன்படுத்திவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த பணத்தில் பிழை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

bank notes

இத்தனை நாட்கள் யாரும் பிழையை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் அதிலிருக்கும் பிழையை கண்டறிந்து பிழையை சுட்டிக்காட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலானதையடுத்து இந்த விவகாரம் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியின் காதுக்கு சென்றுள்ளது. பெரிய பிழை நடந்துவிட்டது. அடுத்த பதிப்பிலிருந்து ரூபாய் நோட்டிலிருக்கும் பிழை சரிசெய்யப்படும் என ரிசர்வ்  வங்கி ஒப்புதல வழங்கியுள்ளது.