‘நொடிப் பொழுதில் வெடித்து சிதறிய எரிமலை’..பின்னாடி வேகமாகச் செல்வது என்ன ஏலியனின் பறக்கும் தட்டா? வைரல் வீடியோ!

 

‘நொடிப் பொழுதில் வெடித்து சிதறிய எரிமலை’..பின்னாடி வேகமாகச் செல்வது என்ன ஏலியனின் பறக்கும் தட்டா? வைரல் வீடியோ!

மெக்சிகோ நாட்டில் எரிமலைகள் அதிகமாக இருப்பதால் அவை திடீரென எரிமலை வெடித்து  அதிலிருந்து தீக்குழம்பு வெளியாவது அங்கு இயல்பு தான்.

மெக்சிகோ நாட்டில் எரிமலைகள் அதிகமாக இருப்பதால் அவை திடீரென எரிமலை வெடித்து  அதிலிருந்து தீக்குழம்பு வெளியாவது அங்கு இயல்பு தான். அங்குக் கடைசியாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கடந்த 27 ஆம் தேதி இரவு போபோகேட்டபெட் என்ற எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. அதனைத்தொடர்ந்து ஒரு 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் வெடித்துள்ளது. அதன் பின்னர், அதிலிருந்து நெருப்பு குழம்புகள் வெளிவந்து மலை மீது ஓடி, அதிலிருந்து வந்த புகை வானை நோக்கிச் சென்ன்றுள்ளது.

ttn

இந்த எரிமலை வெடித்துச் சிதறிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் எரிமலை வெடிப்பது மட்டும் இல்லாமல் அதன் பின்னே இடது புறத்தில் இருந்து வலது புறமாக திடீரென ஒரு ஒளி தோன்றி மறைகிறது. அதனைக் கண்ட மக்கள், அது என்ன ஏலியனின் பறக்கும் தட்டா? என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அது செயற்கைக் கோளாக இருக்கலாம் என்றும் ஒரு விமானமாக இருக்கலாம் என்றும்  விண்கல்லாகக் கூட இருக்கலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.