ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுங்க, பாஸ்போர்ட் வாங்குங்க‌

 

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுங்க, பாஸ்போர்ட் வாங்குங்க‌

ஏன்யா, பேஜ் வியூவ்ஸ் கூடணும்கிறதுக்காக எதையாவது தலைப்புல போட்டுட்டு உள்ள கண்டதையும் எழுதுறதே உங்களுக்கு வேலையாப் போச்சுன்னு நினைக்காதீங்க. நிஜமாவே, பாஸ்போர்ட் காணாமப் போனா, உங்க உதவிக்கு வருகிறது மெக்டொனால்ட் கடைகள்.

ஏன்யா, பேஜ் வியூவ்ஸ் கூடணும்கிறதுக்காக எதையாவது தலைப்புல போட்டுட்டு உள்ள கண்டதையும் எழுதுறதே உங்களுக்கு வேலையாப் போச்சுன்னு நினைக்காதீங்க. நிஜமாவே, பாஸ்போர்ட் காணாமப் போனா, உங்க உதவிக்கு வருகிறது மெக்டொனால்ட் கடைகள். எங்க நம்ம ஊர்லயான்னா,இல்ல. இது நடப்பது ஆஸ்திரியாவில். இந்த வசதி எல்லாருக்குமல்ல, அமெரிக்க குடிமகன்களுக்கு மட்டும். சரி, பில்டப் போதும், விஷயத்துக்கு வருவோம்.

chicken nuggets

ஆஸ்திரியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமகன்களின் பாஸ்போர்ட் ஒருவேளை அந்நாட்டில் தொலைந்துபோனால், அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் அருகில் இருக்கும் மெக்டொனால்ட் கடைக்கு செல்ல வேண்டியது. அங்கே பணியில் இருக்கும் ஊழியர்களிடம் ஒரு சீஸ்பர்கரோ சிக்கன் நக்கெட்ஸோ ஆர்டர் செய்துவிட்டு, உங்கள் பாஸ்போர்ட் காணாமல் போன விஷயத்தை சாவகாசமாக அவர்களிடம் சொல்ல வேண்டியது. “ஆஹா அருமையான திட்டமா இருக்கே, உடனே ஃபாஸ்ட் புட் காரங்க என்னோட பாஸ்போர்ட்டை தேடி கண்டுபிடிச்சு குடுத்துடுவாங்களா? இதுனால அவுங்களுக்கு ஏகப்பட்ட சிரம்மாச்சே” என அடுக்கடுக்காக அடுத்தடுத்த‌ கேள்விகளுக்கு தாவும்முன், முழுசா விஷயத்தை கேட்டுடுங்க.

passport

ஆஸ்திரியாவுக்கு போனீங்களா? பாஸ்போர்ட் காணாம போச்சா? மெக்டொனால்ட் கடைக்கு போகுறீங்களா? சீஸ்பர்கர் ஆர்டர் பண்றீங்களா? இதுவரைக்கும் எல்லாமே கரெக்ட்டா ஃப்ளோவா போச்சா? இப்ப, மெக்டொனால்ட் கடைகாரங்க, அமெரிக்க தூதரகத்துக்கு உங்க பாஸ்போர்ட் காணாமப் போன விஷயத்தை சொல்லிடுவாங்க. சரி ரைட்டு, அடுத்து? அடுத்தெல்லாம் எதுவும் இல்ல, அவ்ளோதான் விஷயம்.

இதென்னாடா பித்தலாட்டமா இருக்கு? கரப்பான் பூச்சிய கொல்லுற மிஷினை விடவும் கேவலமா இருக்கே, பாஸ்போர்ட் காணாமப் போனா போலிஸ் ஸ்டேஷனுக்கு போகாம ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு எந்த பைத்தியகாரனாச்சும் போவானான்னு  பேர்ட் வேர்ட்ஸ்ல‌ எங்ககிட்ட சண்டைக்கு வரக்கூடாது. மெக்டொனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்குற ஒரு புது வசதியாதான் உங்களுக்கு சொல்லிருக்கோம். பாராட்டோ திட்டோ எதுவா இருந்தாலும், அக்கட மீட்டிங்கு, ஜருகண்டி