உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கான்வே அசத்தல் ஆட்டம்… 2 விக்கெட் இழப்பு, 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கான்வே அசத்தல் ஆட்டம்…  2 விக்கெட் இழப்பு, 102 ரன்கள் குவித்த நியூசிலாந்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்போட்டியின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையினால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகளை இழந்ததது. கேப்டன் கோலி 44 ரன்களிலும்,துணை கேப்டன் ரகானே 49 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஸ்வின் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 92.1 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது.
நியூசிலாந்து அணியின் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஜெமினி சீசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Image

இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் லாதம் ஆகியோர் களமிறங்கினர். தேநீர் இடைவேளையின்போது 21 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 சேர்த்து ஆடி வருகிறது. லாதம் 17 ரன்களுடனும் கான்வே 18 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி இஷாந்த் ஷர்மா,பும்ரா,ஷமி மற்றும் அஸ்வின் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் எடுக்க இயலவில்லை. தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்தின் கையே சற்று ஓங்கி உள்ளது.

இதன் பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே மற்றும் லாதம் ஆகியோர் களமிறங்கினர். தேநீர் இடைவேளையின்போது 21 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 சேர்த்தது. இந்திய அணி இஷாந்த் ஷர்மா,பும்ரா,ஷமி மற்றும் அஸ்வின் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் விக்கெட் எடுக்க இயலவில்லை. ஒரு வழியாக அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். அணியின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்த போது லாதம் 30 ரன்னில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். நிதானமாக ஆடிய கான்வே 54 ரன்களில் சமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து 49 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்த போது , போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.