• July
    24
    Wednesday

Main Area

Main



உலகிலேயே உயரமான முருகன் சிலை… வியக்கவைக்கும் தொழிலதிபர்..!

முருகன் திருவுருவச் சிலை
முருகன் திருவுருவச் சிலை
Loading...

முருகனுக்கு அறுபடை வீடு தமிழ் நாட்டில் இருந்தாலும்,மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலுக்கு போகணும்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.காரணம்- குகை கோவில் வாசலில் பிரம்மாண்டமாக நிற்கும் முருகன் திருவுருவச் சிலை.140 அடி உயரத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிலைதான் உலகிலேயே உயரமான முருகன் சிலை.

murugan

அதைவிட  உயரமான சிலையை அமைத்து உலக தமிழர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த தொழிலிலதிபர் ஸ்ரீதர்.சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டன் பாளையத்தில் தான் மிக உயரமான முருகன் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் உயரம் 146 அடி.

மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் உள்ள  சிலையை வடிவமைத்தவர்  தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி.  அவர்தான் இந்த 146 அடி பிரமாண்டமான முருகன் சிலையையும் வடிவமைக்கிறார்.

murugan

சிலை முழுமையடைந்ததும்,அங்கேயே பெரிய மண்டபம் ஒன்றையும் கட்டி நாள்தோறும் அன்னதானம் போடும் திட்டத்தையும் வைத்திருக்கிறார் இவர்.சிலை வடிக்க,மண்டபம் கட்ட ஆகும் அத்தனை செலவுகளையும் ஸ்ரீதர் தனி ஆளாக நின்று செய்கிறார்.இந்த சிலை முழுமையடைத்ததும் உலக வரைபடத்தில் சேலம் தவிக்க முடியாத ஊராக இடம் பெறும் எனப்து நிச்சயம்.

2018 TopTamilNews. All rights reserved.