நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – ஏன் தெரியுமா?

 

நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – ஏன் தெரியுமா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை உலக சுகாதார அமைப்பு வெகுவாகப் பாராட்டியுள்ளது. அதுவும் கொரோனா தொடர்பான விஷயத்திற்காக.

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 5 கோடியே 24 லட்சத்து 67 40 ஆயிரத்து 865 பேர். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து 747 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 965 நபர்கள்.

நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – ஏன் தெரியுமா?

இந்தியாவில் மட்டுமே 86,84,039 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,28,165 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அதற்கு முன்பு அதிகரித்த வேகத்தை வைத்துப்பார்த்தால் அமெரிக்காவை முந்திச் சென்றுவிடும் என்று அச்சப்பட வைத்தது.

இந்தியாவில் புதிய நோயாளிகள் குறைய முன்கள வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட அனைவரும்தாம் காரணம். அவர்களைச் சரியாக இயக்கி வருகிற மத்திய அரசின் பணியையை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். உலக சுகாதார மையத்தின் பாராட்டும் இதை ஒட்டியே அமைந்திருக்கிறது.

நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு – ஏன் தெரியுமா?
New Delhi, Sep 24 (ANI): Prime Minister Narendra Modi addresses after launching ‘Fit India Age Appropriate Fitness Protocols’ during an online Fit India Dialogue, to celebrate the first anniversary of the Fit India Movement, in New Delhi on Thursday. (ANI Photo)

கொரோனா தொடர்பான பணிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேகமாகச் செயல்படுகிறார் என்றும், கொரோனா தடுப்பூசி மற்றும் அதை உலகம் முழுவதும் விநியோகிக்கும் முறைகளில் ஆர்வத்துடன் மோடி செயலாற்றுவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அடானெம், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடவும் செய்திருக்கிறார்.