Home வணிகம் கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் 3 மாதத்தில் ரூ.39,510 கோடிக்கு தங்கத்தை வாங்கி குவித்த மக்கள்

கொரோனா தொற்றுநோய் மத்தியிலும் இந்தியாவில் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.39,510 கோடிக்கு தங்கம் விற்பனையாகி உள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. மேலும், நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். நெருக்கடியான நேரங்களில் நிதி தேவைக்கு கை கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.

தங்க நகைகள்

கொரோனா வைரஸ் பரவல் நம் நாட்டில் தங்கம் விற்பனையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டில் தங்கம் விற்பனை மதிப்பு அடிப்படையில் 4 சதவீதம் குறைந்து ரூ.39,510 கோடியாக குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரூ.41,300 கோடிக்கு தங்கம் விற்பனையாகி இருந்தது.

உலக தங்க கவுன்சில்

கடந்த செப்டம்பர் காலாண்டில் தங்கம் விற்பனை அளவு அடிப்படையில், 30 சதவீதம் குறைந்து 86.6 டன்களாக குறைந்துள்ளது. 2019 செப்டம்பர் காலாண்டில் 123.9 டன்கள் தங்கம் விற்பனையாகி இருந்தது. அதேசமயம் 2020 ஜூன் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் 64 டன்கள் மட்டுமே தங்கம் விற்பனையாகி இருந்தது.

மாவட்ட செய்திகள்

Most Popular

கடல்வீரர்கள் 3ம் ஆண்டு நினைவு தினம்; 172 பேருக்கும் அஞ்சலி

29.11.2017 இரவில் வீசிய அந்த ஒக்கி புயலின் தாக்கத்தில் இருந்து இன்னமும் மீளவில்லை கன்னியாகுமரி. 172 உயிர்களை காவு வாங்கிய அந்த சோகத்தில் இருந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் உறவினர்கள்.

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தேனி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி...

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர்...

விஜய் மக்கள் இயக்கத்தின் யூ-டியூப் சேனல் : அதிகாரப்பூர்வ தகவல்!

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் மக்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!