உலக புகழ்பெற்ற மதுரை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்!

உலக புகழ்பெற்ற மதுரை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்!

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது.

உலக புகழ்பெற்ற மதுரை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்!

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை அவினியாபுரம், பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் சீறி வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பல காளைகள், காளையர்களுக்கு அடங்காமல், சீறி கொண்டு சென்றன.

உலக புகழ்பெற்ற மதுரை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்!

இந்நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 655 காளைகள் பங்கேற்கின்றனர்.

உலக புகழ்பெற்ற மதுரை ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு’ – முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைக்கின்றனர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடிவீரர், காளை உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது. பைக், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பரிசுகளும் தரப்படுகின்றன. பார்வையாளர்களுக்காக வாடிவாசலில் இருபுறமும் 300 மீட்டர் நீளம், 8 அடி உயரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.