உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது

 

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது

நியூயார்க்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்துள்ளது. அதாவது 5,505,307 பேருக்கு உலகில் கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனா நோய்த் தொற்றால் 346,188 பேர் உலகில் இறந்துள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 லட்சத்தை கடந்தது

ஐரோப்பாவில் 2,047,401 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 172,824 பேர் ஐரோப்பாவில் கொரோனாவால் இறந்துள்ளனர். அதனால் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட கண்டமாக ஐரோப்பா உள்ளது. அமெரிக்காவில் 1,662,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 98,223 பேர் கொரோனாவால் அமெரிக்காவில் இறந்துள்ளனர். உலகில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர்.