• February
    24
    Monday

Main Area

Main



இன்று செல்பி எடுத்தீங்களா? உலக கேமரா தினமாம்... நைட் குள்ள எடுத்துடுங்க!! 

photo
photo

இன்று உலகக் கேமரா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  தினம் தினம் பல்வேறு நிகழ்வுகளைக் கடந்து வரும் நாம், பின்னர் எப்போதாவது அவற்றில் சிலவற்றைப் பசுமையாய் நினைவுகூற புகைப் படங்கள் உதவுகின்றன.

புகைப்படக் கலையின் முன்னோடியாகக் கருதப்படுபவர் பிரான்சின் ஜோசஃப் நிசிஃபர் நீப்ஸ். அவர்தான் 1814இல் முதல் புகைப்படத்தை எடுத்தார். அதன் பிறகு கேமராக்களின் செயல்பாடுகளில் எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டன. கேமராவும் தொழில்நுட்பமும் தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. 

புகைப்படம்

நம் வாழ்வின் முக்கியத் தருணங்களைப் படமெடுத்த புகைப்படச் சுருளைக் கொடுத்து, அவை அச்சிட்டு வரக் காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அவ்வப்போதே பார்த்து மகிழவும், அச்சிடத் தேவையின்றி சேகரித்து வைக்கவும் உதவுகிறது இன்றைய நவீன தொழில்நுட்பம். இப்போதெல்லாம் கைத்தொலைபேசி மூலமாகவே தரமான படங்களை எடுக்க முடிகிறது.  இன்றைக்கு செல்பியோ அல்லது நண்பர்களுடன் இணைந்து புகைப்படமோ எடுக்கவில்லை என்றால் இரவுக்குள் எடுத்து நம்மள அழகாக காட்டுகிற கேமரா தினத்தை கொண்டாடி மகிழுங்கள்... 

2018 TopTamilNews. All rights reserved.