“ரத்தத்திற்கு மாற்று ரத்தம் மட்டுமே” : கொரோனாவால் குறைந்த ரத்த தானம்!

 

“ரத்தத்திற்கு மாற்று ரத்தம் மட்டுமே” : கொரோனாவால் குறைந்த ரத்த தானம்!

சாலை விபத்து , அறுவை சிகிச்சைகள், இதய சிகிச்சை, பிரசவம், புற்றுநோய், தலசீமியா, டயாலிசிஸ் போன்ற பலமருத்துவ காரணங்களுக்காக ரத்தம் தேவைப்படும். இதனால் ரத்த தானம் செய்யும் நன்கொடையாளர்களிடமிருந்து ரத்தம் பெறப்பட்டு பல உயிர்கள் தினம் தினம் காப்பாற்றப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் தேதி உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் அவசியம் என்ன என்பதை வலியுறுத்தும் வகையில், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

“ரத்தத்திற்கு மாற்று ரத்தம் மட்டுமே” : கொரோனாவால் குறைந்த ரத்த தானம்!

அத்துடன் பலர் உயரிய நோக்கத்துடன் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் அப்படிப்பட்டவர்களையும் பாராட்டவும் , பெருமைப்படுத்தும் இந்த நாளை உலக சுகாதார நிறுவனம் கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது.

ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவ நாம் செய்யும் ரத்த தானம் பெருமைக்குரியது. இன, மத, மொழி வேறுபாடின்றி உலகெங்கிலும் வாழும் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரே தானம் என்றால் அது ரத்த தானம் என்று சொன்னால் அது மிகையாகாது. என்ன பகை இருந்தாலும், என்ன சாதி , மத பேதம் பார்த்தாலும் ஒருவர் உயிருக்கு போராடும் போது அதையெல்லாம் மறந்து நாம் ரத்த தானம் செய்வது நமக்கு மனித பிறவிக்கான அங்கீகாரத்தைப் பெற்று தருகிறது.

“ரத்தத்திற்கு மாற்று ரத்தம் மட்டுமே” : கொரோனாவால் குறைந்த ரத்த தானம்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. ரத்ததானம் செய்வதன் மூலம் கொரோனா தொற்று பரவிவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள். இளைஞர்கள் ரத்த தானம் செய்ய முன்வந்தாலும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பயந்து அவர்களை தடுக்கிறார்கள்.

ஆனால் ரத்தத்திற்காக காத்திருக்கும் அந்த உயிரை காப்பாற்ற ரத்தத்தை தவிர வேறு எந்தகாரணியும் இல்லை என்பதை பலரும் மறந்து விடுவது வேதனையளிக்கிறது. எனவே உரிய கொரோனா பாதுகாப்புடன் பொது மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். ரத்தத்திற்கு மாற்று ரத்தம் மட்டுமே என்பது உணர்ந்து ரத்த தானம் செய்ய நன்கொடையாளர்கள் முன்வந்து பல உயிர்களை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.