உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியா!

 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியா!

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியா!

கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதிற்குட்பட்டோருக்கான யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த அமித் குமார் 10,000மீ நடைப்போட்டியில் கலந்து கொண்டார். அதில் 42 நிமிடம் 17.94 நொடிகளில் இலக்கை அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன் மூலம் முதல்முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற இந்தியா!

இப்போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார் கென்யாவின் ஹெரிஸ்டோன். இவர் 10,000மீ நடைப்போட்டியில் 42.10.84 நொடிகளில் இலக்கை அடைந்துள்ளார்.வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள அமித் குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.