உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

 

உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

உலக எஸ்ட்ஸ் தினத்தையொட்டி, இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில், அரசு ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.

உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ராசாமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு எய்ட்ஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்றுகொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்டத்தில் எய்ட்ஸால் 4 ஆயிரம் பேர் பாதிக்கபட்டு, சுகாதாரதுறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், அரசின் நடவடிக்கையால், எய்ட்ஸால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

இதேபோல், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில், ஏராளமான அரசு அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி பாதாகையில் கையொப்பமிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
மேலும், ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பயண அட்டை மற்றும் மாணவர்களுக்கு நிதியதவியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சுகாதாரத்துறை சார்பில், அரசு
தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் புதிய வாகனத்தை கொடி அசைத்து துவங்கி வைத்ததார்.

உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றுகொண்டனர். தொடர்ந்து, எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் நிதியுதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், நடப்பாண்டு தேனி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் 5 பேருக்கும், பொதுமக்கள் 294 பேருக்கும், எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறினார். மேலும், அவர்கள் மாவட்டத்தில் உள்ள 2 ஏ.ஆர்,டி கூட்டு மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

உலக எய்ட்ஸ் தினம்- ஆட்சியர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் முத்துச்சாமி தலைமையில், அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்றுகொண்டனர். தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய வருவாய் அலுவலர், பின்னர் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.