• March
    31
    Tuesday

Main Area

Main



தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்! நினைத்ததை சாதிக்கும் மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு
தேசிய குடிமக்கள் பதிவேடு

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் நாட்டின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இடம் பெற உள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான குடியுரிமை சட்டத் திருத்தம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தேசிய குடிமக்கள் பதிவேடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாகக் கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதன் பின்னர், 2015 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதனால்,  2021 ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதற்கு ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று வெளியான தகவல் உண்மையல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்கள் எந்த ஆவணங்களையும் காட்ட வேண்டியதில்லை. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 6 மாதமோ அல்லது அதற்கு அதிகமான காலமாகவோ இருந்தால் அவர் குடிமகனாகக் கருதப்பட்டு என்.ஆர்.சி பட்டியலில் தகவல்கள் சேர்க்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது. குடியரசுத்தலைவர் உட்பட நாட்டின் முக்கிய விஐபிக்களிடமிருந்து இருந்து கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.