புதுச்சேரி பஞ்சாலைகளை காக்க வேண்டும்! – நாராயணசாமியை சந்தித்து தொழிலாளர்கள் கோரிக்கை

 

புதுச்சேரி பஞ்சாலைகளை காக்க வேண்டும்! – நாராயணசாமியை சந்தித்து தொழிலாளர்கள் கோரிக்கை

புதுச்சேரி முதல்வர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சரை சந்தித்து மில்களை அரசு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரியில் ஏ.எஃப்.டி, பாரதி, சுதேசி என்று மூன்று மில்கள் இயங்கி வந்தன. பொருளாதார இழப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதியுடன் இந்த மில்கள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது. அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு வந்ததால் முன்னதாகவே மில்கள் மூடப்பட்டன. மீண்டும் திறப்பது தொடர்பான எந்த முயற்சியும் நடைபெறவில்லை.

புதுச்சேரி பஞ்சாலைகளை காக்க வேண்டும்! – நாராயணசாமியை சந்தித்து தொழிலாளர்கள் கோரிக்கை
இந்த நிலையில் இந்த பஞ்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் முதல்வர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “புதுச்சேரியில் உள்ள ஏஎஃப்டி, பாரதி, சுதேசி ஆகிய மூன்று மில்களை அரசு மூடக்கூடாது. தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கும் நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள ஒட்டுமொத்த ஊதியத்தில் பாதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீதியை இவ்வாண்டு இறுதிக்குள் இரண்டு தவணைகளாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களுக்கு முதலமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.