பொங்கல் பரிசு வாங்க குவிந்த தொழிலாளர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

 

பொங்கல் பரிசு வாங்க குவிந்த தொழிலாளர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை அருகே பொங்கல் பரிசு வாங்க ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ.2,500 பணமும் பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் கூட்டம் சேராத வண்ணம், பகுதி வாரியாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன்னர், பொங்கல் பரிசை பெற முடியாதவர்கள் 19ம் தேதியன்றும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு வாங்க குவிந்த தொழிலாளர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு!

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் பொங்கல் பரிசு வாங்க ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் 7 ஆயிரம் பேருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி, இன்று ஒரே நாளில் தொழிலாளர்கள் அங்கு குவிந்துள்ளனர். சரியான திட்டமிடுதல் இல்லாததால் தனிமனித இடைவெளியின்றி தொழிலாளர்கள் குவிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. முதன்முறையாக அந்த தாலுகாவில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதால் கூட்டம் கூடியதாக தெரிகிறது.