பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி! – திருச்சியில் பரபரப்பு

 

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி! – திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கூலித் தொழிலாளி ஒருவர் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டி ஊராட்சி நரியம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிடத் தொழிலாளியாக இவரது வீட்டுக்கு செல்லும் பாதையின் ஓரத்தில் பொது இடத்தில் அதே ஊரைச் சேர்ந்த கோபால் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்ட செங்கல் வாங்கி அடுக்கிவைத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கல், மணல் கொட்டி அந்த பாதை முழுவதையும் கோபால் ஆக்கிரமிப்பு செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி! – திருச்சியில் பரபரப்பு
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மாரியப்பன் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். கிராம அதிகாரிகள், வட்டாட்சியர் என பலரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றாததைக் கண்டித்து வீட்டில் இருக்கும் பொருட்களை வீதியில் போட்டு போராட்டம் நடத்தினார்.

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்ற தொழிலாளி! – திருச்சியில் பரபரப்புஇந்த தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிய வரவே, பிரச்னை விபரீதமாக ஆவதற்குள் தடுக்க வேண்டும் என்று விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமாதானப்படுத்தும் வகையில் அதிகாரிகள் பேசியதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக கூறாத நிலையில் தயாராக வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தன் மீதும் குடும்பத்தினர் மீதும் ஊற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவரை தடுத்து நிறுத்தினர். ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மாரியப்பன் போராட்டத்தைக் கைவிட்டார். கூலித் தொழிலாளி திடீரென்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.