மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி; நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை

 

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி; நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை

திருவள்ளூர்

விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த வழக்கில், நிலத்தின் உரிமையாளருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம் முனிநாயுடுபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கோனசமுத்திரம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். இதனை அறியாத கூலி தொழிலாளி சஞ்சீவி என்பவர், நெல் மூட்டைகளை எடுப்பதற்காக வேலியை தாண்டிய போது, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி; நில உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை

இதுகுறித்து, சஞ்வீயின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், பொதட்டூர்பேட்டை காவல் நிலைய போலீசார், சுப்பிரமணி நாயுடுவை கைதுசெய்தனர். இதுதொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி செல்வநாதன், சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து, கூலித் தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான சுப்பிரமணிக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்புவழங்கினார்.